• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய சாமிநாதன்..,

ByP.Thangapandi

Jul 7, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில் சுமார் 40 மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர் சாமிநாதன்
தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.,

இதில் சேடபட்டி ஒன்றியத்தில் உள்ள 40 மாற்றுத்திறனாளி பயனாளிகளை தேர்வு செய்து காது ஒலி கருவி, கைபேசி, வீல் சேர், வாக்கிங் கைப்பிடி, நடை பயிற்சி வண்டி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினர்.,

இதில் திட்ட ஒருங்கிணைப்பாளர் பொன்ராஜ் மற்றும் தமிழ்நாடு உரிமைகள் திட்ட பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.,