• Fri. Aug 21st, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

ஆட்சியர் அலுவலகம் முன்பு மோர் மிளகாய் தொழிலை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்..,

ByS.Ariyanayagam

Jul 6, 2026

திண்டுக்கல் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு மோர் மிளகாய் தொழில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். திண்டுக்கல், ரெட்டியார்சத்திரம் ஸ்ரீராமபுரம் அருகே உள்ள போலியம்மனூர் பகுதியில் பல ஆண்டுகளாக மோர் மிளகாய் தொழில் நடைபெற்று வருகிறது.

இந்த மோர் மிளகாய் கழிவு மற்றும் உப்பு கழிவு நீர் வெளியேற்றம் காரணமாக நிலத்தடி நீர், விவசாயம் நிலங்கள், சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களுக்கு யானைக்கால் வியாதி, சிறுநீரக கோளாறு உள்ளிட்ட உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கால்நடைகளும் நோய் தொற்றால் பாதிப்பு அடைவதாக கூறி பலமுறை நான் மனு அளித்து நடவடிக்கை எடுக்காத காரணத்தால் 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.