• Mon. Oct 5th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டி அதிமுக – திமுக வின் முக்கிய நிர்வாகிகள் அமைச்சர் நிர்மல்குமார், எம்எல்ஏ விஜயை சந்தித்து தவெகவில் ஐக்கியமாகினர்.,

ByP.Thangapandi

Jul 4, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் எம்எல்ஏ விஜய்-யை சந்தித்த அதிமுக செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜா, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ரகு, மாவட்ட எம்.ஜீ.ஆர் மன்ற இளைஞரணி செயலாளர் கருத்தப்பாண்டி மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், அதிமுக கிளைச் செயலாளர்கள் மற்றும் திமுகவின் ஆரியபட்டி கிளைச் செயலாளர் பாண்டியன் உள்பட சுமார் 100 க்கும் மேற்பட்டோர் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.,

தவெக வில் இணைந்த அதிமுக, திமுக நிர்வாகிகளை பொன்னாடை அணிவித்து எம்எல்ஏ விஜய் வரவேற்றார்., தொடர்ந்து தேனி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சென்று விட்டு மதுரை திரும்பிய அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் – யையும் சந்தித்து தவெகவில் இணைந்த அதிமுக மற்றும் திமுக நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்ற நிலையில், அமைச்சரும் தவெக துண்டுகளை அணிவித்து தவெகவில் இணைந்தமைக்கு வாழ்த்தி வரவேற்றார்.,