• Thu. Nov 19th, 2026

திருப்பரங்குன்றம் மலை என்று சிக்கந்தர் தர்ஹா நிர்வாகமே அன்று ஒத்து கொண்டது இதோ ஆதாரம்!

ByKalamegam Viswanathan

Nov 19, 2026

2024-ல் திருப்பரங்குன்றம் மலை மேல் அடங்கிருக்கும் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்ஹாவிற்கு செல்லும் வழி என்றும்,மலைமேல் தர்ஹாவில் கந்தூரி செய்பவர்களுக்கு அனைத்து வசதிகளும் உள்ளன என்று தர்ஹா நிர்வாகம் சார்பில் விளம்பர பலகை வைத்த போது அதனை இந்து அமைப்புகள் கண்டித்ததின் அடிப்படையில் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் திருக்கோயிலுக்கு சொந்தமான திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதையில் வழக்கத்திற்கு மாறாக விளம்பர பலகை உள்ளதால் அந்த விளம்பர பலகையை அகற்ற வேண்டுமென்று 4/12/2024 அன்று திருப்பரங்குன்றம் காவல்நிலையத்தில் புகார் அளித்து சர்ச்சைக்குரிய விளம்பர பலகை அகற்றப்பட்டது.

இதில் என்ன வேடிக்கை என்றால் அப்பொழுது திருப்பரங்குன்றம் மலை திருக்கோயிலுக்கு சொந்தமானது என்று திருக்கோயில் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
அதேபோல் தர்ஹா நிர்வாகம் சார்பில் வைத்துள்ள விளம்பர பலகையிலும் திருப்பரங்குன்றம் மலை என்று குறிப்பிட்டுள்ளது.

ஆனால் இப்பொழுது திருப்பரங்குன்றம் மலை சிக்கந்தர் மலை என்று தற்போது தர்ஹா நிர்வாகமும் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்களும் கோசங்கள் போட்டு கொக்கறித்து இரட்டை வேடம் போட்டு வருகிறது.
இதற்கு திருக்கோயில் நிர்வாகம் எந்த ஒரு புகாரும்,நடவடிக்கையும் எடுக்காமல் தர்ஹா நிர்வாகத்திற்கு ஆதரவாக ஒத்து ஊதுகிறது.