• Mon. Aug 24th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

காந்திநகர் காலனி பகுதியில் சாக்கடை நீளம் அகலம் குறைவு விரிவுபடுத்தக் கோரி பொதுமக்கள் கோரிக்கை..,

தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சி 4 வது வார்டு காந்திநகர் காலனி பகுதியில் சுமார் 130 குடும்பங்கள் 500க்கும் மேல் மக்கள் வசித்து வருகின்றனர். அருகில் மாணவியர் விடுதியும் செயல்பட்டு வரும் சூழலில் சாக்கடை பணி நடைபெற்று 20 ஆண்டுகளுக்கு மேலாகியதால் சாலையின் உயரம் மேம்பட்டுவிட்டது.

போதிலும் 20 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் தொகை குறைவாக இருந்த நிலையில் தற்போது மக்கள் தொகை அதிகமாக இருக்கும் பட்சத்தில் கழிவுநீர் செல்லும் சாக்கடை வாய் சிறிய அளவில் உள்ளதால் அதை விரிவுபடுத்தி சாக்கடை கழிவுநீர் ரோட்டில் வராதவாறு ஏற்பாடு செய்து தரக்கோரி அப்பகுதிவாழ் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். கழிவுநீர் ரோட்டில் செல்வதால் பள்ளி குழந்தைகளுக்கும் வயதானோருக்கும் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும் குப்பை வாங்குவதற்கு தூய்மை பணியாளர்கள் சரிவர வருவதில்லை என்றும் நாய்தொல்லை அதிகம் இருக்கும் பட்சத்தில் தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்வதற்கு ஏற்பாடு செய்து தரக்கோரி கோரிக்கை வைத்து வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அப்பகுதி மக்களை நோய்தொற்றிலிருந்து விடுபட ஏற்பாடு செய்யக்கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.