• Wed. Sep 30th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

வி.ஜி.எம். மருத்துவமனையில் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாட்டம்..,

BySeenu

Jul 1, 2026

அசோசியேசன் ஆப் அலையன்ஸ் கிளப் இன்டர்நேஷனல் மாவட்டம் 250 S மற்றும் வி.ஜி.எம் அறக்கட்டளை சார்பில் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாட்டம். கோவை வி.ஜி.எம் அறக்கட்டளை மற்றும் அசோசியேசன் ஆப் அலையன்ஸ் கிளப் இன்டர்நேஷனல் மாவட்டம் 250 S ஆகியவை இணைந்து தேசிய மருத்துவர்கள் தின கொண்டாட்டம் கோவை வி.ஜி.எம் மருத்துவமனை அரங்கில் நடைபெற்றது.

இதில் அலையன்ஸ் மாவட்ட ஆளுநர் ஜி. சுந்தரம் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தார். இவ்விழாவில் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் டாக்டர் வி. சுமதி மற்றும் வி ஜி எம் ஃபவுண்டேஷன் நிர்வாக அறங்காவலர் டாக்டர் வி ஜி மோகன் பிரசாத் மற்றும் சர்வதேச அலையன்ஸ் சங்கத்தின் இயக்குனர் என் ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

மேலும் கோவை மாவட்டத்தில் உள்ள சிறந்த மருத்துவ சேவை புரிந்த 14 மருத்துவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் மற்றும் சிறப்பு மருத்துவர் விருது வழங்கப்பட்டது.விழாவில் சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் அலையன். குணசேகரன், அலையன். விஜயகுமார், அலையன். T. ஸ்ரீனிவாசன் மற்றும் அலையன் ராஜேஷ்குமார் வாழ்த்துரை வழங்கினார்கள். விஜிஎம் மருத்துவமனையில் எலும்பு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுமன் அனைவரையும் வரவேற்றார். விழாவின் முடிவில் அலையன்ஸ் மாவட்ட இரண்டாம் துணை ஆளுநர் அலையன்ஸ் எஸ். பிரபாகரன் நன்றி கூறினார்.

இதில் வி.ஜி.எம் மருத்துவமனை டாக்டர்கள் Dr. சுமன், Dr.மதுரா பிரசாத், Dr.மித்ரா பிரசாத், Dr.வம்சி மூர்த்தி, மற்றும் அலையன்ஸ் சங்கத்தின் மாவட்ட செயலாளர்கள் ரவீந்திரன், ராய் தாமஸ் அமைச்சரவை ஆலோசகர் பாலசுப்ரமணியம், தலைவர் டாக்டர் சுபத்ரா ஐயங்கார் ஆகியோர் கலந்து கொண்டனர்.