• Sat. Aug 15th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

சாத்தூர் சட்டமன்ற தொகுதி ஆலங்குளத்தில் அறிமுக நிகழ்ச்சி..,

ByK Kaliraj

Jul 1, 2026

விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக ஜெயபெருமாள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அறிமுக நிகழ்ச்சி சாத்தூர் சட்டமன்ற தொகுதி ஆலங்குளத்தில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான சுப்பிரமணியன் தலைமை வகித்தார், சாத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முக கனி முன்னிலை வகித்தார், வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர் முனியசாமி வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் எதிர் கோட்டை மணிகண்டன், ராமராஜ் பாண்டியன், தங்கவேலு, மாவட்ட மாணவர் அணி செயலாளர் விக்னேஸ்வரன், உள்பட வெம்பக்கோட்டை கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயபெருமாள் பேசியது

முன்னாள் அமைச்சர்கள் முன்னாள் எம்எல்ஏக்கள் தங்களுடைய சொத்துக்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மாற்றுக் கட்சிக்கு சென்றுள்ளனர். ஆனால் உண்மையான தொண்டர்கள், கிளைச் செயலாளர்கள் அதிமுக கட்சி தான் முக்கியம் இரட்டை இலை சின்னம் தான் தங்களுக்கு முக்கியம் என யாரும் இதுவரை அதிமுகவில் இருந்து விலகவில்லை.

அனைவரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையை ஏற்றுக் கொண்டு உள்ளனர்.சுயநலத்திற்காக கட்சி விட்டு சென்றவர்கள், துரோகம் செய்தவர்கள், தற்போது சேர்ந்துள்ள கட்சியில் அவமானப்பட்டு வருந்தி, மீண்டும் அதிமுகவிற்கு திரும்புவார்கள்.

சென்ற உள்ளாட்சித் தேர்தலில் தமிழகத்திலேயே வெம்பக்கோட்டை யூனியன் 20 இடங்களையும் முழுமையாக அதிமுக கைப்பற்றி சாதனை படைத்தது. வரும் உள்ளாட்சி தேர்தலிலும் அதுபோன்று அதிமுக அனைத்து இடங்களையும் கைப்பற்றி மாபெரும் சாதனை படைக்கும் என கூறினார்.

மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ரமேஷ், முன்னாள் கவுன்சிலர் பரமேஸ்வரி ஆகியோர் நன்றி கூறினார்கள்.

விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயபெருமாளுக்கு சாத்தூர் சட்டமன்ற தொகுதி சங்கரமூர்த்திபட்டி, எதிர்க்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக கட்சியினர் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.