மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள்ள இணை இயக்குனர் அலுவலகத்தில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, தத்தனேரி, திருமங்கலம், உசிலம்பட்டி அரசு மருத்துவமனை உள்ளிட்ட மதுரை மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் சுமார் 9 செவிலியர்களுக்கான துணை செவிலியர் பிரிவு செவிலியர் கண்காணிப்பாளர் தரம் -2 ஆகப் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு பணியிடத்தை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு இன்று நடைபெற இருந்த சூழலில்,

இந்நிலையில் 29.06.2026 கலந்தாய்வு பிற்பகல் 3. மணிக்கு கலந்தாய்வு நடைபெறும் எனவும் 26.06.2026 அன்று மொகரம் பண்டிகை அரசு விடுமுறை தினத்திலும் செவிலியர்களுக்கு கடிதம் கிடைக்கப்பெற்ற நிலையில் உசிலம்பட்டியில் உள்ள இணை இயக்குனர் அலுவலகத்திற்கு வந்தனர்., இன்று கையெழுத்து மட்டும் பெற்றுக் கொண்டு கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதை அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கலந்தாய்வு ரத்தானதால் அலைக்கழிக்கப்பட்டதாக செவிலியர்கள் குழப்பமடைந்து வேதனையடைந்துள்ளனர்.
மேலும் நாளைக்கு இந்த கலந்தாய்வை நடத்தி முறையாக தேர்வு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை கொடுத்துள்ளனர்.



