• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

நீரேத்தான் காளியம்மன் கோயில் யாகசாலை பூஜை

ByKalamegam Viswanathan

Jun 29, 2026

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி நீரேத்தான் வளையல்காரர் தெருவில் அருள் பாலிக்கும் காளியம்மன் கோவிலில் வருட அபிஷேக சிறப்பு யாகசாலை பூஜை அன்னதானம் நடந்தது. ஆனி பௌர்ணமியை முன்னிட்டு காலை 6 மணி முதல் 7.25 மணி வரை காளியம்மனுக்கு மீனாட்சி அம்மன் கோவில் பட்டர் கிருஷ்ண குமார் ஹோமம் வளர்த்து யாகசாலை பூஜை செய்தார். இதில் காளியம்மன் வெள்ளி காப்பு அணிந்து மல்லிகை ரோஜா செவ்வரளி மலர்களால் அலங்காரிக்கப்பட்டு எலுமிச்சை மாலை அணிந்து அருள் பாலித்தார். இந்த பூஜையினை கோவில் பூசாரி பொன் பாண்டி செய்தார்.

.இந்த விழாவில் முன்னாள் பேரூராட்சி தலைவர் கவுன்சிலர் கிருஷ்ணவேணி பால்பாண்டியன், பேரூராட்சி துணை தலைவர் வழக்கறிஞர் கார்த்திக், திமுக முன்னாள் பேரூர் செயலாளர் மு.பா. பிரகாஷ் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 8 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதன் ஏற்பாடுகளை வளையல் கார தெருவிழாக் குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.