மதுரை அவனியாபுரம் அருகே உள்ள வில்லாபுரம் மாநகராட்சி காலனி பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. மற்றும் ராஜா உசேன் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே கோவில் திருவிழாவின் போது முன்விரோதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி பாலாஜி மற்றும் அவரது நண்பரான ராஜா உசேன் ஆகிய இருவரும் மாநகராட்சி காலனி பகுதியில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த கும்பல் ஒன்று பாலாஜி மற்றும் ராஜா உசேனை அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றது.
இதில் பலத்த வெட்டுக்காயமடைந்த பாலாஜி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

அவரது நண்பர் ராஜா உசேன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பாக அவனியாபுரம் போலீசார் தப்பியோடிய கும்பலை தனிப்படை அமைத்து தேடிய நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக
மாதேஷ் (வயது 21) சஞ்சய் ராமசாமி (வயது 17) சிவக்குமார் (வயது 17) சூர்ய பிரகாஷ் (வயது 17) தயாநிதி வயது( 17) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போலீசார் கைது செய்யும்போது தப்பி ஓடியதாக சொல்லப்படும் பூவலிங்கத்தையும் பின்னர் கைது செய்தனர்.

தற்போது இக்கொலை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக பார்க்கப்படும் மௌனன் முனிஸ் மற்றும் சண்முகம் ஆகியவர்களையும் இன்று கைது செய்தால் மட்டும் உடலை வாங்குவோம் என கூறி காவல்நிலைய முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து போலீசார் தலைமறைவாக உள்ள மௌனம் முனீஸ் மற்றும் சண்முகம் இருவரையும் கைது செய்து விட்டோம் என போலீஸ் தரப்பில் கூறியதை தொடர்ந்து. படுகொலை செய்யப்பட்ட பாலாஜியின் உடலை உறவினர்கள் இவரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருந்து பெற்றுக் கொள்ளசம்மதம் தெரிவித்தனர். எத்தனை தொடர்பு ஆதித் தேர்தல் பேரவை சார்பில் அதியமான் மற்றும் கட்சி நிர்வாகிகள் உறவினர்கள்இறந்த பாலாஜியின் உடலுக்கு மலர அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் மதுரை மாநகராட்சி காலனியில் உள்ள பாலாஜியின் வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஏராளமானோர் அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து ஊர் மூலமாக எடுத்துச் செல்லப்பட்டு அவனியாபுரம் மயானத்தில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டது .
பாலாஜி இறுதி ஊர்வலத்தை தொடர்ந்து அவனியாபுரம் பகுதியில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க காவல் உதவி ஆணைய செந்தில்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.



