• Wed. Jun 24th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் அருகே குட்கா பதுக்கி வைத்திருந்த 2பேர் கைது..,

ByS.Ariyanayagam

Jun 24, 2026

ஒட்டன்சத்திரம் அருகே தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேர் கைது – ரூ.7,13,500, 45 கிலோ குட்கா, 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திண்டுக்கல் ஒட்டன்சத்திரம், தும்பிச்சம்பட்டி, மேட்டுப்பட்டியில் கார்த்திக் என்பவர் வீட்டில் ஒட்டன்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் லிங்கபாண்டியன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை மேற்கொண்ட போது கார்த்திக் வீட்டில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்ததை தொடர்ந்து போலீசார் கைது செய்து வீட்டில் இருந்து 32 கிலோ குட்காவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்ட போது

ஒட்டன்சத்திரம், சம்சுதீன் காலனி பகுதியில் பாசித்(43)-இடம் வாங்கி விற்பனை செய்வதாக பெரிய வந்ததை தொடர்ந்து போலீசார் பாசித்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு அவரது 2 கார்களில் 13 கிலோ குட்கா, ரூ.7,13,000 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்