• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

உலக யோகா தினம் கொண்டாட்டம்..,

ByK Kaliraj

Jun 21, 2026

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள சல்வார்பட்டியில் இயங்கி வரும் CEOA Matriculation Higher Secondary School பள்ளியில் உலக யோகா தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

உலக யோகா தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்கள் யோகாசனங்களில் ஈடுபட்டு, யோகா உடலையும் மனதையும் ஒருமுகப்படுத்தி ஆரோக்கியமான வாழ்க்கையை வழங்குகிறது என்பதை வலியுறுத்தினர். மேலும், மாணவர்கள் பத்மாசன நிலையில் அணிவகுத்து யோகாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் பாக்கியநாதன் தலைமை தாங்கினார்.

பள்ளியின் முதல்வர் தாட்சியாயிணி தேவி நிகழ்ச்சியின் சிறப்புகளை விளக்கி உரையாற்றினார். பள்ளியின் உதவி தலைமையாசிரியர் ராஜா மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சி மாணவர்களிடையே யோகா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.