• Sat. Sep 19th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

அம்மையநாயக்கனூர் தண்ணீரில் மூழ்கிய ரெயில்வே சுரங்க பாதை -பொதுமக்கள் பாதிப்பு…,

ByPuthar Pandian P

Jun 19, 2026

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால் அம்மையநாயக்கனூர் ரெயில்வே மேம்பாலம் சுரங்க பாதை கீழ் மழை தண்ணீர் குளம் போல தேங்கி நிற்கிறது 4 அடிக்கு வரை தண்ணீர் தேங்கி நின்றதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

இதனால் நிலக்கோட்டை வத்தலக்குண்டு பெரியகுளம், கொடைக்கானல் செல்லம் பஸ், கார், வேன் போன்ற வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி தவித்தனர்.
இந்த ரெயில்வே சுரங்க பாதையில் கடந்து செல்லும் மாணவ- மாணவிகள் குழந்தைகள் அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டு வந்தனர்.

பல்வேறு ஊர்கள் கிராமத்திற்கு செல்லும் மோட்டார் சைக்கிள் சைக்கிள் நடந்து செல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சுரங்க பாதையில் தண்ணீரை கடந்து செல்ல முன்ற சில கார் மோட்டார் சைக்கிள் போன்றவை பழுது ஏற்பட்டு நின்றது
மழை காலங்களில் இந்த ரெயில்வே சுரங்கப் பாதையில் மழை தண்ணீர் தேங்கி நிற்பது தொடர் கதையாக இருக்கிறது.

மழை தண்ணீர் வெளியேற்ற பேரூராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலை துறை சுழற்சி முறையில் தண்ணீரை மோட்டர் வைத்து வெளியேற்றி வருகின்றனர்.
சுரங்க பாதையில் இருந்து தண்ணீர் வெளியே செல்லும் இடங்களில் மண் அடைப்புகளை அகற்றி தண்ணீர் தேங்கி நிற்காமல் கடந்து செல்ல நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.