• Tue. Jun 16th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

சாலையோர வியாபாரிகள் சங்கமான UITUC பேரவை கூட்டம்..,

ByS. SRIDHAR

Jun 16, 2026

புதுக்கோட்டை மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கமான UITUC பேரவை கூட்டம் புதுக்கோட்டை கே எம் மஹாலில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு இச்சங்கத்தின் மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.

இதில் சிறப்புரையாற்றிய ராமச்சந்திரன் தெருவோர வியாபாரிகளின் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் தங்களுடைய சங்கம் செயல்படுவதாகவும் எதிர்காலத்தில் தெருவோர வியாபாரிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் பொருட்டு ஒரு லட்சம் ரூபாய்க்கான குறைந்த வட்டியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கடன் பெற்று தர இருப்பதாகவும் இதற்கு மாநில அரசும் உதவி செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் தங்களுடைய அனைத்து கோரிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இன்று நடைபெற்ற பேரவை கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் சுருளி மணி மாவட்ட செயலாளர் சக்திவேல் கலையரசன், நாகூர் கனி செல்வராஜ் அம்பிகாபதி ரமேஷ் ஆறுமுகம் அமினாம்பாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்