மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உசிலம்பட்டி- பேரையூர் செல்லும் சாலையில் நல்லதேவன்பட்டி கண்மாய் அமைந்துள்ளது.

இந்த கண்மாய் இப்பகுதி விவசாயிகளின் நீர் ஆதாரமாகவும் விளங்குகிறது., இந்நிலையில் உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள கோழி, இறைச்சி மற்றும் இதர கழிவுகளை சாக்குகளில் மூட்டையாக கட்டப்பட்டு கொட்டப்பட்டு வருகிறது.,இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், நிலத்தடி நீர் மாசுபடுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் புழுக்கள் மொய்த்தும் துர்நாற்றம் வீசியும் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் இப்பகுதியை கடந்து செல்லும் பொழுது சிரமத்திற்குள்ளாகி வருவதாகவும் இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
மாவட்ட நிர்வாகம் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.




