• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மாநகராட்சி அலுவலகத்திற்குள் புகுந்த பாம்பை போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்…

ByK Kaliraj

Jun 8, 2026

சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல் மண்டல அலுவலகத்திற்குள் சுமார் 5 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு புகுந்திருந்தது. இதனால் அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பீதியடைந்து அலறினர்.

இதையடுத்து சிவகாசி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்பு துறையினர் மண்டல அலுவலக வளாகத்திற்குள் பதுங்கி இருந்த நல்ல பாம்பை பிடிக்க முயன்றனர். அப்போது அந்த பாம்பு படம் எடுத்து அனைவரையும் பயமுறுத்தியது.

பத்திரமாக பாம்பை மீட்ட தீயணைப்பு துறையினர் அதனை கொண்டு சென்று காட்டுப்பகுதிக்குள் விட்டனர். மாநகராட்சி மண்டல அலுவலகத்திற்குள் பாம்பு புகுந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.