• Mon. Jul 27th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

புதுக்கோட்டை மாவட்ட அளவிலான அபாகஸ் போட்டி..,

ByS. SRIDHAR

Jun 6, 2026

புதுக்கோட்டை மாலையிடு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று எஸ்ஐபி அபாகஸ் புதுக்கோட்டை சார்பில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான அபாகஸ் போட்டி வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த போட்டியினை எஸ்ஐபி அபாகஸ் நிர்வாக இயக்குனர்கள் ராஜேந்திரன் பிரவீனா ராஜேந்திரன் ஏற்பாடு செய்திருந்தனர். இவர்களிடம் புதுக்கோட்டை அறந்தாங்கி கறம்பக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் அபாகஸ் பயிற்சி பெற்ற வருகின்றனர். இவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் விதத்தில் அதன் நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் ஏற்பாட்டில் இன்று 1000 மாணவ மாணவிகள் பங்கேற்கும் அபாகஸ் தேர்வு போட்டிகள் நடைபெற்றது.

இதில் ஆறு வயது முதல் 13 வயது வரை மாணவ மாணவிகள் பங்கேற்றனர் ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து நிமிடம் எட்டு நிமிடம் மூன்று நிமிடம் ஐந்து நிமிடம் என நிமிடங்கள் நிர்ணயிக்கப்பட்டு முப்பதுக்கு மேற்பட்ட கணக்குகளை செய்யும் தேர்வு நடைபெற்றது. மேலும் இந்த தேர்வில் கலந்து கொண்ட 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒரே இடத்தில் ரெடி ஸ்டார்ட் 1 2 எனக்கூறி விசில் அடித்தவுடன் தேர்வில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் கைகளில் வைத்திருந்த அபாகஸ் இயந்திரத்தின் மூலம் காய்களை வேக வேகமாக நகர்த்தி உடனுக்குடன் கணக்குகளை செய்து அதனை தேர்வு தாளில் குறித்து தேர்வு எழுதியது அனைவரிடத்திலும் பெரும் ஆச்சரியத்தை பெற்றது.

கைகளில் டைப் படிப்பது போல் மின்னல் வேகத்தில் அபகஸ் இயந்திரத்தில் கணக்குகளை போட்டு அசத்தியது சிறப்பு விருந்தினிடம் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. மேலும் இந்த போட்டியில் தமிழ்நாடு தொழிலாளர் துறை அமைச்சர் முகமது பர்வேஷ் கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்து மாணவனிடம் கலந்துரையாடினார். அப்பொழுது மாணவர்களின் பெற்றோர்கள் அமைச்சரிடம் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர்.