• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மதுபோதையில் இயக்கப்பட்ட கார் மோதி ஒருவர் உயிரிழப்பு..! நான்கு பேர் காயம்..,

ByM.I.MOHAMMED FAROOK

Jun 6, 2026

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள காமராஜர் சாலையில் இன்று காலை திடீரென்று ஒரு கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்ற இருசக்கர வாகனம் மற்றும் நடந்து சென்றவர்களை மோதியவாறு சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்றுள்ளது.

அப்பொழுது சாலையில் சென்ற பொதுமக்கள் அந்த காரை துரத்திச் சென்று காரை இயக்கிய இரண்டு நபர்களைப் பிடித்து போக்குவரத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அப்பொழுது போலீசார் அவர்களிடம் நடத்தை விசாரணையில் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த மேகராஜன் மற்றும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வா என்றும் அவர்கள் மது போதையில் காரை இயக்கியதும் தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் அவர்களை கைது செய்து மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த கார் விபத்தில் சாலையில் இருசக்கர வாகனத்தில் மற்றும் நடந்து சென்ற ஐந்து பேருக்கு பலமான காயம் ஏற்பட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் சுரேஷ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதமடைந்துள்ளது. இந்த நிலையில் காரைக்கால் நகர பகுதியில் மதுபோதையில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் சென்றவர்களை மோதியவாறு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுகிறது.