• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

காரைக்கால் அருகே திடீரென்று வீட்டில் தீ விபத்து..,

ByM.I.MOHAMMED FAROOK

Jun 6, 2026

காரைக்கால் மாவட்டத்தில் கோவில்பத்து பிள்ளை தெருவாசல் கலைஞர் நகரில் வசித்து வருபவர் கோபாலகிருஷ்ணன். இவர் வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் வெளியே சென்றுள்ளார். இந்த நிலையில் இவரது வீட்டில் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் காரைக்காலில் நிலவி வரும் கடும் கோடை வெப்பம் காரணமாக தீ மலமலவென பரவி வீட்டின் கூரை மற்றும் வீட்டில் உள்ள பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தொடர்ந்து தீ விபத்து குறித்து வருவாய்த்துறை மற்றும் நகர காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கோடை வெப்பம் காரணமாக திடீர் தீ விபத்தால் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.