• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ரஜினி ஆரம்பிக்க இருந்த கட்சியில் சேர என்னை அழைத்தார் – அண்ணாமலை..,

பாரதிய ஜனதா கட்சியிலிருந்து வெளிவந்த பின்பு இன்று சமூக வலைதளம் மூலம் மக்களை சந்தித்து தன்னுடைய கருத்துக்களையும், புதிதாக தொடங்க உள்ள கட்சியைப் பற்றியும் தெரிந்த நீரோடையாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியிருக்கிறார்.

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியதாவது ..,

பாஜகவில் இணைவதாக பி.எல்.சந்தோஷ் அவர்களிடம் வாக்குறுதி அளித்தேன், பி.எல்.சந்தோஷிடம் வாக்குறுதி அளித்ததால் அன்று ரஜினி அழைப்பை ஏற்கவில்லை.

சென்னை திரும்பியதும் ரஜினியை சந்தித்து மன்னிப்பு கோரினேன். பாஜகவில் இருந்தாலும் தமிழ்நாட்டு உணர்வுகளை விட்டுக்கொடுத்தவில்லை, தமிழ் மொழி, கலாச்சாரத்தை ஒரு போதும் விட்டுக் கொடுத்ததில்லை!

நான் பெருமைமிகு இந்தியன், பாரம்பரியமிக்க தமிழன், இந்தியன் எனும் அடையாளத்தோடு பெருமைமிகு தமிழனாக உள்ளேன், தமிழர் அடையாளத்தோடு தேர்தல்களில் தனித்து போட்டியிட விரும்பினேன்.

தனிப்பட்ட ஒரு கட்சிக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை, அனைத்து தேர்தல்களிலும் பாஜக தனித்து போட்டியிட வேண்டும் என விரும்பினேன்.

பிரதமர் மோடி மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு”

பாஜகவில் இருந்து கொண்டு மோடிக்கு பிரச்சனையாக இருக்க விரும்பவில்லை”என முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.