• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மதுபோதையில் ஸ்பைடர் மேனாக மாறிய மதுப்பிரியர்..,

ByKalamegam Viswanathan

Jun 5, 2026

மதுரை மாநகர் அவனியாபுரம் பகுதியை சேர்ந்த பாண்டிகடல் – இவரது மனைவி கர்ப்பிணியாக உள்ளார். தம்பதிக்கு ஒரு மகனும் உள்ளார்.

பாண்டிகடலின் மனைவி தாயாரின் வீட்டிற்கு சென்ற நிலையில் தன்னுடன் வர வேண்டும் என கூறியதால் அவரது மனைவி இதனை மறுத்துள்ளார்.

இந்நிலையில் மதுபோதையில் இருந்த கடல்பாண்டி இரவு 10 மணியளவில் மதுரை பெரியார் பேருந்துநிலைய காம்ப்ளக்ஸ் கட்டிடத்தில் உள்ள மழைநீர் சேகரிப்பு குழாயை பிடித்தவாறு சர்ரென ஸ்பைடர் மேன் போல விறுவிறுவென ஏறியுள்ளார். தனது மனைவி மகனை தன்னோடு சேர்த்துவைக்க வேண்டும் மனைவி இங்கு வர வேண்டும் என கூறியபடி அடுத்தடுத்த தளங்களுக்கு குழாயில் தொங்கியபடி ஏறினார்.

இதனை பார்த்த பொதுமக்கள் திடீர்நகர் காவல்துறையினருக்கு தகவல் அளித்த நிலையில் காவல்துறையினர் பெரியார் பேருந்து நிலைய தீயணைப்புத்துறையினரை வரவழைத்தனர்.

இதனை தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி கீழே இறங்குமாறு கெஞ்சியும், பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இறங்க மறுத்து தனது மனைவி அவனியாபுரத்தில் உள்ளார். அவரை அழைத்துவர வேண்டும் இல்லையென்றால் குதித்துவிடுவேன் என தொடர்ந்து கூறியபடி தொங்கியதோடு ஜன்னலில் உள்ள கண்ணாடிகளை உடைத்து அதை வைத்து உடலை கிழித்துகொண்டு காயப்படுத்தியபடி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

மனைவி எங்கு உள்ளார் என காவல்துறையினர் மைக் மூலமாக கேள்வி எழுப்பியபோது அவனியாபுரத்துல பாண்டிகடல்னு பொண்டாட்டினு சொன்னா தெரியும் இங்கு கூப்டு வாங்க என கூறி காவல்துறையினர் , தீயணைப்புத்துறையினரின் பொறுமையை சோதித்துபார்த்தார்.

மேலும் கீழே குதித்துவிடுவார் என்பதற்காக தீயணைப்புதுறையினரும் வலையை விரித்தபடி காத்திருந்தனர்.

இதனை தொடர்ந்து மதுபோதையில் இருந்த பாண்டிகடலை நீண்ட நேர போராட்டத்திற்கு மேல ஏறிய தீயணைப்புத்துறையினர் நொடிப்பொழுதில் ஜன்னல் வழியாக பாண்டிகடலை இழுத்து காப்பாற்றி மீட்டனர்.

இதனை தொடர்ந்து உடல் முழுவதும் காயங்களுடன் இருந்த பாண்டிகடலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மதுபோதையில் இருந்த பாண்டிகடல் செய்த ஸ்பைடர்மேன் சாகசத்தால் பல மணி நேரமாக தீயணைப்புத்துறையினரும், காவல்துறையினரும் போராடி தவித்தனர்.