கோவையில், கோவை மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டர்களில் நடிகர் ரஜினிகாந்தின் உருவப்படத்துடன், “தலைவா ஆணையிடு! அண்ணாமலை மகுடம் சூட…” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்த எதிர்பார்ப்பை வெளிப்படுத்தும் வகையிலும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த போஸ்டர்கள் கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளதால் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளன.



