• Wed. Jun 3rd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம்..,

BySeenu

Jun 3, 2026

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலய மடத்தில் இருந்து வண்ணாங்கோவில் வரை சுமார் 1 கிலோ மீட்டருக்கும் மேலாக சுமார் 4 வருடங்களுக்கு முன்பு மேம்பாலம் கட்டப்பட்டு தற்போது மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மேம்பாலம் கட்டிய வருடத்தில் இருந்தே முழுவதுமாக முடிக்காமல் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. மழை வரும்போது அருவியாக இந்த மேம்பாலம் மாறுவது வாடிக்கையாகிவிட்டது. இன்று பெரியநாயக்கன்பாளையத்தில் பலத்த மழை பெய்ததால் மேம்பாலத்திலேயே மழைநீர் வடிய வழியில்லாமல் தேங்கி நின்றது. ஒரு சில இடங்களில் மழைநீர் வடிய அமைக்கப்பட்ட பைப் உடைத்து அதில் இருந்து வெளியேறும் மழைநீர் மோட்டர் பம்பில் இருந்து வரும் நீர் போல குபுகுபு என கொட்டுகிறது.

மேலும் பாலத்தில் இடுக்கில் இருந்து நீர் அருவிபோல கொட்டி வருகிறது. மேம்பாலத்தின் அடியே வரும் வாகனங்கள் இந்த அருவியில் குளித்து கொண்டுதான் வருகிறது. குறிப்பாக பேருந்துகள் முழுவதுமாக மேம்பால அருவியில் நனைந்தப்படி வருகிறது. யாரை குறைகூறுவது என்று மக்களுக்கு தெரியவில்லை. இந்த மேம்பாலத்திற்கு எப்போதுதான் விடிவுகாலம் வரும் என்று மக்கள், வாகன ஓட்டிகள் கவலையில் உள்ளனர்.