• Tue. Jun 2nd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

கோவையில் செயல்பட்டு வரும் டிஎன் ஹாப்பி கிட்ஸ் பிளே ஸ்கூல்..,

BySeenu

Jun 2, 2026

கோவை சாய்பாபா காலனியில் செயல்பட்டு வரும் “டிஎன் ஹாப்பி கிட்ஸ்” நிறுவனத்தின் ஆன்லைன் மானிட்டரிங் பிளே ஸ்கூல் ஒரு ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறப்பு ஆண்டு விழா இன்று நடைபெற்றது.

இந்த விழாவில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண் பரிசோதனை மற்றும் ரத்தப் பரிசோதனை முகாம்களை தொடங்கி வைத்து நிகழ்ச்சியை சிறப்பித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிஎன் ஹாப்பி கிட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் அருண் சத்யா, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கொளத்தூர், தாம்பரம் மற்றும் தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 11 பள்ளிகள் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், கோவை சாய்பாபா காலனியில் செயல்பட்டு வரும் ஆன்லைன் மானிட்டரிங் பிளே ஸ்கூல் இந்தியாவில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட தனித்துவமான கல்வி முறையாகும் என்றார்.பள்ளி வளாகத்தில் குழந்தைகளின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், பெற்றோர்கள் மட்டுமே சிறப்பு ஸ்கேனிங் முறையின் மூலம் பள்ளிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், மற்றவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்றும் கூறினார். மேலும், பள்ளி முழுவதும் கேமராக்கள் மற்றும் ஆன்லைன் கண்காணிப்பு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதால், குழந்தைகள் பள்ளியில் மேற்கொள்ளும் செயல்பாடுகளை பெற்றோர்கள் தங்களது செல்போன் மூலம் நேரடியாக கண்காணிக்க முடியும் என்றார்.

அமைச்சர் வழங்கிய ஆலோசனையை ஏற்று, தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு அனுமதிக் கட்டணம் முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டு கல்விக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என அறிவித்தார். அதேபோல், ஸ்விக்கி, ஜோமேட்டோ நிறுவன ஊழியர்கள், ராபிடோ, ஓலா மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களின் குழந்தைகளுக்கு ஜூன் 1 முதல் ஜூன் 6 வரை அனுமதிக் கட்டணம் இல்லாமல் சேர்க்கை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.சாமானிய மக்களுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இந்தியாவின் முதல் ரோபோடிக் ஆன்லைன் மானிட்டரிங் பள்ளியையும் தங்களது நிறுவனம் நடத்தி வருவதாக தெரிவித்தார்.

மேலும்,பள்ளிக் கட்டணம் மாதம் ரூ.2,500 முதல் ரூ.3,000 வரை மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், ஒற்றைப் பெற்றோர் கொண்ட குழந்தைகளுக்கு கட்டணத்தில் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.