மக்களைப் பற்றி கவலைப்படாமல் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உள்ளனர்.

அரசால் தடை செய்யப்பட்ட ரசாயனங்களை மாம்பழங்களில் வைத்து தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து தினந்தோறும் அனுப்பப்படுகிறது. சமூக ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
ஆயக்குடி அருகே சாலையோரத்தில் மாம்பழத்துடன் கொட்டப்பட்டு வரும் ரசாயன கழிவுகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுவதுடன் ரசாயனம் கொட்டப்படும் பகுதியில் உள்ள விவசாய நிலங்களையும் பாதிக்கும் என பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
தமிழக அரசு திண்டுக்கல் மாவட்டத்தில் பல வருடங்களாக பொதுமக்களை பற்றியே கவலைப்படாமல் உள்ள உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து வேறு மாவட்டங்களுக்கு இடம் மாற்றம் செய்ய வேண்டும்.
அரசு நேரடியாக தலையிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி மற்றும் நத்தம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மாம்பழ மண்டிகள் மற்றும் பெரிய கடை முதல் சிறிய கடை வரை அனைத்தையும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.



