• Fri. May 29th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

ஐ.ஏ.எஸ். தேர்வில் இந்தியாலேயே 2-வது இடம் ராஜேஸ்வரி கவி..,

ByPuthar Pandian P

May 29, 2026

திண்டுக்கல் மாவட்ட சப் கலெக்டராக ராஜேஸ்வரி சுவி பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த யூ பி எஸ் எ சி , குரூப் 1 தேர்வு எழுதினார் ஐ.ஏ. எஸ் தேர்வில் இந்தியாவின் இரண்டாவது இடம் பிடித்து வெற்றி பெற்றார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள அம்மாபட்டி இவர் சொந்த ஊர் ஆகும். தற்போது இவருடைய தந்தை முருகதாஸ் தாய் டாக்டர் நாகராணி ஆகியோருடன் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் வசித்து வருகிறார்.
நேற்று இவருக்கு சொந்த ஊரான கொடைரோடு அருகே உள்ள அம்மாபட்டிக்கு வருகை தந்தார். அம்மாபட்டி ஊர் பொதுமக்கள் சார்பாக ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாவட்ட சப் கலெக்டர் ராஜேஸ்வரி சுவிக்கு மாலை அணிவித்து மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலும் பாராட்டு விழா நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் பங்குதந்தை மைக்கேல் ராஜ், ஊர் நாட்டாமை பிரபு, மணியார் ஆரோக்கிய தாஸ், பொருளாளர் அமுல்ராஜ் மற்றும்
ஊர் பொதுமக்கள் அவருடைய பெற்றோர், உறவினர்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.