புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அலஞ்சிராங்காடு கிராமத்தில், அமைந்திருக்கும் குருகுலம் ஆங்கிலப் பள்ளியில் கும்பகோணம் கிங்ஸ்பெரி இன் ஹோட்டல், புதுக்கோட்டை முத்து மீனாட்சி பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை மற்றும் குருகுலம் உயர்நிலைப் பள்ளி இணைந்து நடத்திய மாபெரும் முற்றிலும் இலவச இருதய மருத்துவ முகாம் (26/05/2026) மற்றும் (27/05/2026 )ஆகிய இரு தினங்களில் குருகுலம் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது .

ஆரோக்கியமான இதயத்தை பராமரிப்பது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு முக்கியமானது என்ற அடிப்படையில் இந்நிகழ்ச்சியில் குருகுலம் பள்ளியின் முதல்வர் திருமதி.கவிதா ரவி அவர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை வழங்கினார்,
அதனைத் தொடர்ந்து குருகுலம் பள்ளியின் தாளாளர் க.சிவநேசன் மற்றும் கிங்ஸ்பெரி இன் ஹோட்டல் உரிமையாளர் கோவிந்தராஜ் ஆகியோர் இந்த இலவச இருதய மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்தார்கள்.

இதில் இருதய நோய் நிபுணர் மற்றும் ஆலோசகர் டாக்டர். சுதர்சன், டாக்டர்.ஆரோக்கிய டேணி, எக்கோ டெக்னீசியன்கள் அகிலன், செல்வி. ஜான்சி, மார்க்கெட்டிங் மேனேஜர் பார்த்திபன், மார்க்கெட்டிங் PRO அருண்குமார், மார்க்கெட்டிங் ஒருங்கிணைப்பாளர். A.போதும் பொண்ணு, செவிலியர்கள்-தீபா, பிரவீனா, ரவிதா, சௌமியா, நதியா, பவிதா ,சங்கீதா, மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் சதீஷ் அவர்கள் என அனைவரும் புதுக்கோட்டை முத்துமீனாட்சி பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் இருந்து வருகை புரிந்து இலவசமாக இருதயப் பரிசோதனை, எலக்ட்ரோ கார்டியோகிராம்(EGC) மற்றும் எக்கோ கார்டியோகிராம்(ECHO)போன்ற மருத்துவக் கருவிகளை பள்ளி வளாகத்திலேயே கொண்டு வந்து அமைத்து வைத்து பரிசோதனை செய்தனர்.
இதில் சுமார் 30 க்கு மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள், குருகுலம் பள்ளியின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் , ஆசிரியைகள் என ஒரு நாளுக்கு 100 நபர்கள் வீதம் இரு தினங்களுக்கு 200 நபர்களுக்கு மேல் முற்றிலும் இலவச இருதய பரிசோதனை செய்து அவர்களுக்கு மருத்துவர்கள் சிறந்த ஆலோசனை வழங்கினார்கள்.

மேலும் குருகுலம் உயர்நிலைப் பள்ளியின் நிர்வாக மேலாளர் S.ராஜ்குமார், பள்ளி நல மேலாண்மை அலுவலர் பார்வதி, ஆசிரிய ஆசிரியர்கள் மற்றும் பள்ளி அலுவலர்கள் கலந்து கொண்டு அனைவரும் பயன் பெற்றனர். இதற்கு முன்பு இருதய நோய்கள் என்றால் மிகப்பெரிய மருத்துவமனைகளில் மட்டுமே சென்று சோதனை செய்து கொள்ள முடியும் என்ற நிலையில் குருகுலம் பள்ளி நிர்வாகம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மேற்காணும் நிறுவனங்கள் முத்து மீனாட்சி மருத்துவமனையில் உள்ள மருத்துவ கருவிகளை முகாம் நடத்தும் பள்ளி வளாகத்திலேயே கொண்டு வந்து வைத்து பரிசோதனைகள் செய்து மருத்துவம் செய்தது என்பது மிகப்பெரிய சாதனையாகவும் சேவையாகவும் கருதப்படுகிறது.





