விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெகதீஸ்வரிக்கு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னையில் இருந்து இன்று இராஜபாளையம் வந்த அவருக்கு தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதைத் தொடர்ந்து தொண்டர்களுக்கு நன்றி சொல்லும் கூட்டத்தில் உரையாற்றிய சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி
தமிழக மக்கள் நம் மீதும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மீதும் நம்பிக்கை வைத்து ஆட்சியை கொடுத்துள்ளனர் அந்த ஆட்சிக்கு களங்கம் ஏற்பாடத விதமாக தமிழக வெற்றி கழக தொண்டர்கள் நடந்து கொள்ள வேண்டும் வேலை வாங்கித் தருவதாகவும் அல்லது வேறு எந்த முறையிலும் கட்சி பெயரை தவறாக பயன்படுத்தக் கூடாது மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் நாம் செய்து தர வேண்டும் பேசினார் தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி

எனது சொந்த ஊர் திசையன்விளை நான் அங்கிருந்து எனது பெண் குழந்தையை கை குழந்தையாக இராஜபாளையத்திற்க்கு அடைக்கலம் தேடி வந்தேன் கடந்த 16 ஆண்டுகளாக இராஜபாளையத்தில் தான் வசித்து வருகிறேன் எனக்கு வாழ்வளித்த மண் இராஜபாளையம்
என் மீது பலர் பல அவதூறுகளை வீசி வருகின்றனர். எனக்கு வீடு கொடுத்தார்கள் கார் கொடுத்தார்கள் பணம் கொடுத்தார்கள் என்று அது எதுவுமே உண்மை அல்ல அப்படி கொடுக்கும் நினைக்கும் நண்பர்கள் பணத்தை கொடுத்தால் அதை நான் வாங்கி மக்களுக்கு திருப்பிக் கொடுப்பேன். பணம் கொடுத்த நபர்களுக்கு இராஜபாளையம் நகர் மத்தியில் பொன்னாடை அணிவித்து அவரை வாழ்த்துவேன் என கூறினார்.

நான் தற்போதும் வாடகை வீட்டில் தான் குடியிருந்து வருகிறேன் அது எனக்கு வசதிக்காக தான் இருக்கிறது ஆனால் அமைச்சர் பதவியில் இருப்பதால் என்னை பார்ப்பதற்கு அதிகாரிகளும் கட்சித் தொண்டர்களும் பார்க்க வருவதால் நான் இருக்கும் வீடு வசதி குறைவாக இருப்பதால் வாடகைக்கு வீடு பிடித்துள்ளேன் எனக்கு யாரும் வீடு வாங்கித் தரவில்லை நான் யாரிடமும் எதையும் எதிர்பார்க்கவில்லை என் மீது அவதூறு பரப்பவர்கள் பரப்பிக் கொண்டுதான் இருப்பார்கள் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
மேலும் மக்கள் எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் என்னை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் , நான் ஒரு பத்திரிகையாளராக இருந்து தற்போது
எம் எல் ஏ வாகி அமைச்சராகி உள்ளேன் நான் பத்திரிக்கை துறையை என்றும் மறக்க மாட்டேன் பத்திரிகை துறையை விட்டு நான் எப்பொழுதும் வெளியே செல்ல மாட்டேன் தொடர்ந்து பத்திரிகை துறையில் பணியாற்றுவேன் என்னை பாதுகாத்தது பத்திரிக்கை துறை தான் என சிறப்புரையாற்றி ,
தனது வெற்றிக்காக பாடுபட்ட தமிழக வெற்றி கழக தொண்டர்களுக்கும் வாக்களித்த பொது மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கழக நகர ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.





