• Sun. Dec 14th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தொழிலதிபர் வீட்டில் ரூ.150 கோடி பறிமுதல்: பணத்தை பாதுகாக்க ராணுவம் வரவழைப்பு!

வருமான வரித்துறை சோதனையின்போது தொழிலதிபர் வீட்டில் 150 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதை அடுத்து பணத்தை பாதுகாக்க ராணுவம் வரவழைக்கப்பட்டது தகவல்கள் வெளியாகியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் பியூஷ் ஜெயின் என்பவரது வீட்டில் இன்று திடீரென வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். சோதனையின் முடிவில் தொழிலதிபர் வீட்டில் கட்டுகட்டாக பணம் கைப்பற்றப்பட்டதாகவும் இதுவரை எண்ணப்பட்டதில் சுமார் 150 கோடி ரூபாய்க்கும் மேல் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
இதனை அடுத்து பணத்தை பாதுகாக்க துணை ராணுவ படை வரவழைக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. ஒரே வீட்டில் 150 கோடி ரூபாய்க்கும் மேல் பணம் கட்டுக் கட்டாக கைப்பற்றப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.