புதுக்கோட்டை தேர்தல் இயங்கி வரும் தனியார் ஆங்கிலப் பள்ளியில்
குலுக்கல் முறையில் எல்கேஜி வகுப்பிற்கு மாணவர்கள் சேர்க்கை!
புதுக்கோட்டை ஏவிசிசி மழலையர் பள்ளியில் நடைபெற்றது!

புதுக்கோட்டை திலகர் திடல் பகுதியில் இயங்கி வரும் ஏவிசிசி மழலையர்
மற்றும் தொடக்கப்பள்ளியில் 2026-27 இந்த கல்வி ஆண்டில் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் எல்கேஜி வகுப்பில் தங்கள் குழந்தைகளை சேர்க்க மிக அதிக அளவில் பெற்றோர்கள் விண்ணப்பித்திருந்தனர். அரசு நிர்ணயித்த இடங்களை காட்டிலும் கூடுதலாக சேர்க்கை விண்ணப்பங்கள் பெறப்பட்டதால் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி
நிர்ணயம் செய்யப்பட்ட எண்ணிக்கையிலான மாணவர்களை குலுக்கல் முறையில் தோ்வு செய்யும் நிகழ்ச்சி ஏவிசிசி பள்ளி வளாகத்தில் புதுக்கோட்டை வட்டார வள ஆசிரியர் பயிற்றுனர் சின்னையா தலைமையில் அனைத்து பெற்றோர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

குலுக்கலில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் பெயர்ப் பட்டியலுடன் காத்திருப்போர் பெயர்ப் பட்டியலும் தயார் செய்யப்பட்டு பள்ளி அறிவுப்பு பலகையில் ஒட்டப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி நிறுவனர் ஏவிசிசி கணேசன் தாளாளர் மல்லிகா கணேசன் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் பணியாளர்கள் செய்திருந்தனர்.






