மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவருக்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருதான Medal of the Order of Australia – OAM விருது குவின்ஸ்லாந்து கவர்னர் Hon Dr Jennette Young AC PSM அவர்களால் இன்று வழங்கப்பட்டது.,

இந்நிலையில் பழனிச்சாமி ஒச்சாத்தேவர் ஆஸ்திரேலிய நாட்டின் குவின்ஸ்லாந்தில் வசிக்கும் தமிழர் மற்றும் இந்தியர்களிடையே சமூகப் பணி ஆற்றியமைக்காக அந்த நாடு இந்த விருதை வழங்கி கெளரவித்துள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆஸ்திரேலியா அரசு வழங்கிய இந்த உயரிய விருதால் அங்குள்ள தமிழர்களுக்கு பெருமை கிடைத்துள்ளது.,
இந்த விருதால் உசிலம்பட்டி பகுதி மக்களுக்கு மட்டுமல்லாது தமிழ்நாட்டிற்கும் தமிழருக்கும் கிடைத்த பெருமை என பலரும் பாராட்டி வருகின்றனர்.,




