• Thu. May 21st, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

வேளாண்மை துறை விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிற்சி..,

ByK Kaliraj

May 21, 2026

வேளாண்மை துறை விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் மாவட்டத்திற்குள் விவசாயிகள் பயிற்சி நித்திய கல்யாணி மற்றும் அவுரி பயிர் சாகுபடி தொழில்நுட்பம் என்ற தலைப்பில் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் வெம்பக்கோட்டை அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் வெம்பக்கோட்டை வட்டார நித்திய கல்யாணி மற்றும் அவுரி சாகுபடி செய்யும் விவசாயிகள் 40 நபர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு முத்தையா வேளாண்மை உதவி இயக்குனர் அவர்கள் தலைமையாற்றினார். இப்பயிற்சிக்கு வேளாண் அறிவியல் நிலையம் பேராசிரியர் மற்றும் தலைவர் ராமசுப்ரமணியம்வேளாண் அறிவியில் நிலையத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாக எடுத்துரைத்தார். மேலும் வேளாண் அறிவியல் நிலைய தோட்டக்கலை பேராசிரியர் . பாலசுப்ரமணியம் நித்திய கல்யாணி மற்றும் அவுரி பயிர் சாகுபடி தொழில் நுட்பங்கள் பற்றி எடுத்துரைத்தார். அவர் கூறுகையில்” வெம்பக்கோட்டை வட்டாரத்தில் 166 ஹெக்டேர் பரப்பளவில் நித்திய கல்யாணி மற்றும் அவுரி சாகுபடி செய்தனர். தற்போது 66 ஹெக்டேர் பரப்பளவு சாகுபடி செய்து வருகின்றனர். நித்திய கல்யாணி, அவரி சாகுபடி செய்வதில் விவசாய கூலி ஆட்கள் பற்றாக்குறை காரணத்தினால் சாகுபடி பரப்பு குறைந்த கொண்டே போகின்றது. இந்தியாவில் தமிழ்நாட்டில் விளையும் குறிப்பாக வெம்பக்கோட்டை வட்டாரத்தில் விளைவிக்கப்படும் அவரி, நித்திய கல்யாணி மருத்துவ பயிரியில் அதிகளவில் அல்கலாய்டு இருப்பதால் அமெரிக்கா, ரஷ்யா நாடுகளில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இப்பயிர் சாகுபடி செய்ய குறைந்த அளவு நீர் தேவைப்படுகிறது மற்றும் பூச்சி நோய் மேலாண்மை இப்பயிரில் சாகுபடியில் மிகவும் குறைவு, இவ்விரண்டு பயிர்களும் மருத்துவ குணம் வாய்ந்தது மற்றும் பாரம்பரிய மூலிகை மற்றும் அழகு சாதன பொருட்கள் பயன்படுத்துவதற்கு மேற்பூச்சி மருந்தாக பயன்படுகிறது. மருத்துவ ரீதியில் புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன மருந்துகள் நித்திய கல்யாணி பயிரிலிருந்து எடுக்கப்படும் வின் பிளாஸ்டின் மற்றும் வின்கிறிஸ்டின் போன்ற வேதி பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. அவுரி பயிரில் மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளன. இப்பயிரானது மலச்சிக்கல்,குடல் சுத்தி அரிப்பு, தோல் பராமரிப்பு,கல்லீரல் நச்சு நீக்கம் போன்ற உடல் உபாதைகளை சரி செய்வதற்கு இதிலிருந்து எடுக்கப்படும் வேதிப்பொருளான செனசெய்டுகள் பயன்படுகின்றன. என கூறினார்.

மேலும் வேளாண்மை உதவி இயக்குனர் முத்தையா அவர்கள் வேளாண்மை துறையில் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்களில் வழங்கப்படும் விதைகள், நுண்ணுரங்கள், திரவ உயிர் உரங்கள் குறித்து விரிவாக எடுத்துக் கூறினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வெம்பக்கோட்டை வட்டார தொழில்நுட்பம மேலாளர் பெருமாள்சாமி மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் மாரி ராஜ் மற்றும் சுரேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.