விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அய்யனார் கோவில் செல்லும் சாலையில் ராஜுக்கள் கல்லூரி எதிரே அமைந்துள்ள அம்பேத்கர் நகர் இந்தப் பகுதியில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருந்த வருகின்றனர்

கிருஷ்ணாபுரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட இந்த பகுதியில் 15 தினங்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகவும் அந்த குடிநீரும் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதால் நோய் தொற்றுகள் ஏற்பட்டு பொதுமக்கள் பல வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் ஆகையால் இந்த பகுதியில் முறையான சுத்தமான குடிநீர் வழங்க வேண்டுமென இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த தகவல் அறிந்து வந்த இராஜபாளையம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் சிவசக்தி தலைமையில் போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஒரு வாரத்தில் சரி செய்ய படும் என கிருஷ்ணாபுரம் பஞ்சாயத்து கிளர்க் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. ஒரு வாரத்தில் சரி செய்யப்படவில்லை என்றால் தாலுகா அலுவலகம் முன்பு மீண்டும் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.




