திண்டுக்கல் மாவட்டம் மார்ச் 2026 ல் நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 349 பள்ளிகளைச் சார்ந்த 11759 மாணவர்களும் 12094மாணவியர்கள் என மொத்தமாக 23853 பேர் தேர்வு எழுதினர்.

அதில் 11132 மாணவர்களும் 11786 மாணவியர்கள் என மொத்தம் 22918 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 94.67 மற்றும் மாணவியர் தேர்ச்சி சதவீதம் 97.45 என ஒட்டு மொத்தமான தேர்ச்சி சதவீதம் 96.08 ஆகும். தேர்ச்சி சதவீதம் சென்ற ஆண்டைவிட 2.80 சதவீதம் கூடுதலாக உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் தரவரிசையில் 26 வது இடத்திலிருந்து தற்போது 13 வது இடத்திற்கு முன்னேற்றம் பெற்றுள்ளது. மாவட்ட அளவிலான அரசுப்பள்ளிகளை பொறுத்தவரையில் 4933 மாணவர்கள் தேர்வு எழுதி 4591 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 5178 மாணவியர்கள் தேர்வு எழுதி 4954 மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 93.07 மற்றும் மாணவியர் தேர்ச்சி சதவீதம் 95.67 என ஒட்டு மொத்தமாக அரசுப்பள்ளிகள் தேர்ச்சி சதவீதம் 94.40 ஆகும். அரசுப்பள்ளி தேர்ச்சி சதவீதம் சென்ற ஆண்டைவிட 3.31 சதவீதம் கூடுதலாக உள்ளது. மாவட்ட அளவில் அரசுப்பள்ளிகள் தரவரிசையில் 26-வது இடத்திலிருந்து தற்போது 12 வது இடத்திற்கு முன்னேற்றம் பெற்றுள்ளது.
மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மொத்த பள்ளிகள் 160 ஆகும். இதில் அரசுப்பள்ளிகள் 63 ஆகும் மாணவர்கள் மட்டும் பயிலும் பள்ளி தேர்ச்சி சதவீதம் 95.72 ஆகும் மாணவியர்கள் மட்டும் பயிலும் பள்ளி தேர்ச்சி சதவீதம் 97.13 ஆகும் .இருபாலர் பயிலும்பள்ளிகள் தேர்ச்சி சதவீதம் 95.83 ஆக உள்ளது
ஒட்டு மொத்தமாக 2025-26 ஆம் கல்வியாண்டில் திண்டுக்கல்மாவட்டம் அரசுபள்ளிகள் அளவிலும் அனைத்து பள்ளிகள் அளவிலும் சிறப்பான முன்னேற்றம் பெற்றுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு துணைத்தேர்வு வரும் 08-07-2026 முதல் 15-07-2026 வரை நடைபெற உள்ளது. இத்தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறும் வண்ணம் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.




