கொடைக்கானலில் நடை பெறும் 63-வது மலர் கண்காட்சி விழாவிற்கான நுழைவு கட்டணம் உயர்வு பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடைபெறும் 63- வது மலர் கண்காட்சி விழாவிற்கு நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு ரூ.80-ம், சிறியவர்களுக்கு ரூ.40-ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை விட கூடுதல் கட்டணம் நிர்ணயித்ததால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.




