கோவை பேரூர் மாதம்பட்டி பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்ட தி.மு.க துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி நிகழ்ச்சியில் பேசும்போது ;

சுயமரியாதை திருமணம் செய்த மணமகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தவர், மேடையில் இருக்கின்ற மணமக்களை எடுத்துக் கொண்டோம் என்றால், இருவரும் சிறப்பாக படித்து உள்ளவர்கள், நான் மணமகன் அருகிலே அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டு இருந்த போது அவர் தன் தந்தையின் தொழிலை தொடர்ந்து நடத்திக் கொண்டு இருப்பதாக கூறினார். மணமகளை பற்றி கேட்ட போது அவர் யு.பி.எஸ் தேர்வுக்காக பயிற்சி மேற்கொள்வதாக பெருமையோடு கூறினார். இப்படிப்பட்ட திருமணத்தை நாம் 50 ஆண்டுகளுக்கு முன்பாக 100 ஆண்டுகளுக்கு முன்போ நிச்சயமாக சிந்தித்து பார்த்து இருக்க முடியாது என்றும், மணமகளும் அதிகமாக படித்து இருக்கக் கூடிய வாய்ப்பு இருக்காது நிச்சயமாக, மணமகளுக்கும் படிக்கக் கூடிய வாய்ப்பு கிடைக்காது என்றும், இந்த தடைகளை எல்லாம் தாண்டி இன்று இருவரும் கற்றுத் தேர்ந்தவர்களாக, படித்தவர்களாக தனக்கென்று ஒரு எதிர்காலத்தை, தனக்கு என்று தொழிலை தேர்ந்தெடுக்கக் கூடிய உரிமை இருக்கக் கூடியவர்களாக இன்று இந்த மேடையிலே அமர்ந்து கொண்டு உள்ளதாகவும், நிச்சமாக மணமகன் தந்தை செய்யும் கொண்டு இருக்கிற தொழிலை செய்வது கட்டாயம் இல்லை என்றவர், ஒரு கால கட்டத்தில் அந்த கட்டாயத்தில் இருந்ததாகவும், ஆனால் இன்று அவர் இதை தேர்ந்தெடுக்கிறார் என்றார், யாரும் ? கட்டாயப்படுத்தி சமூகம் எல்லாம் இதை செய்ய வேண்டும் என்று சொல்லி நிர்பந்திக்கவில்லை என்றும், அதேபோல் மணமகள் கேட்டால் தான் வீட்டில் இருக்கப் போறேன் என்று கூறவில்லை.

தான் படித்து விட்டு யு.பி.எஸ் தேர்வுகள் எழுதி விட்டு அதற்குப் பிறகு இந்த நாட்டின் நிர்வாகத்திலே பங்கேற்க பங்கேற்று கொள்ளக் கூடிய கனவோடு இருப்பதாகவும், என்று கூறிய மணமகள் இந்த நிலை வருவதற்கு எத்தனை ஆண்டு காலமாக தந்தை பெரியார் தொடங்கி, திராவிட இயக்க தலைவர்கள் எல்லாம் போராடி இருக்கிறார்கள். பாடுபட்டு இருக்கிறார்கள் என்று புரிந்து கொண்ட, புரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பாக இந்த திருமணம் மேடை அமைந்து இருப்பதாக தெரிவித்தவர், படிக்கக் கூடாது என்ற ஜாதியில் பெயரால், படிக்கக் கூடாது நீ பெண்ணாக பிறந்து விட்டாய் என்று சொன்னார்கள், அந்த காலங்கள் எல்லாம் அந்த சிந்தனைகளை எல்லாம் உடைக்க முதலில் இந்த மேடையில் ஒரு தடி கொடுத்ததாகவும், அதை மணமக்களிடமே கொடுத்து விட்டதாவும் கூறியவர், ஏனென்றால் அடுத்த தலைமுறை அந்த தடியோடு, அந்த சிந்தனைகளோடு அடுத்த தலைமுறை உருவாக வேண்டும், அந்த தடி எப்படிப்பட்ட தடி என்றால், ஒரு காலகட்டத்தில் பெண் படிக்கக் கூடாது. நீ இந்த ஜாதியாக இருந்தால் படிக்க கூடாது என்பதை எதிர்த்து ஓங்கியதடி அந்தத் தடி என்றவர் அதைத்தான் பார்த்து இன்றைக்கும் நிறைய பேர் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
தந்தை பெரியாரின் பெயரை சொன்னாலே இன்றைக்கு பல பேருக்கு இத்தனை ஆண்டுகள் தான் மறைந்தும் இத்தனை ஆண்டுகளுக்கு பின்னாலும் ஒரு மனிதனுடைய பெயரை சொன்னால் அது பல பேருக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறது என்றால், அது தந்தை பெரியார்களுடைய பெயர் என்றார். அதனால் அடுத்த தலைமுறை மட்டுமல்ல இன்று இருக்கக் கூடிய நாமும் தந்தை பெரியார் இந்த மண்ணிற்காக என்ன செய்திருக்கிறார்கள் ? என்ற மாற்றங்களுக்கு எல்லாம் அவர் உந்து சக்தியாக இருந்திருக்கிறார். என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றவர், படிப்பதை தெரிந்து கொண்டு அதற்கு அப்புறம் பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடலாம், ஆனால் தெரிஞ்சுக்காமலே கட்டமைக்கப்படுவதாகவும், குறிப்பிட்டுச் சொன்னார்கள் பெரியார் அவர்கள் அவர் சொன்னார்,

இவர் சொன்னார் என்பதனால் நீங்கள் நம்பக் கூடாது என்று சொன்னார். அவர், இவர் சொன்னார் என்பதை தாண்டி முக்கியமாக நம்ப கூடாது. ஒன்று இருக்கிறது என்றால் இந்த இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் யூனிவர்சிட்டி பயன்படுத்தி கொண்டு என்ன ? மாறுதல்களை எல்லாம் என்ன ? சிந்தனை போக்குகள், எல்லாம் மாற்றி அமைக்கக் கூடிய வழிவகை இந்த நாட்டில் நடந்து கொண்டு உள்ளதாக தெரியும் என்றும், அதை தாண்டி இன்னைக்கு அதையே பயன்படுத்தி நல்ல விஷயங்களையும் கொடுக்கலாம், நம்முடைய சித்தாந்தங்களை, நம்முடைய கருத்துக்களையும், நம்முடைய வலிமைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வதிலே அதில் எந்த இயக்…




