• Thu. May 21st, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தில் மையக் குழு கூட்டம்…

BySeenu

May 20, 2026

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தில் மையக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பி எல் சந்தோஷ் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பாஜக முக்கிய தலைவர்களான சுதாகர் ரெட்டி, நயினார் நாகேந்திரன் ,எல் முருகன் ,எச் ராஜா, தமிழிசை சௌந்தர்ராஜன் ,வானதி சீனிவாசன் ,ஏ பி முருகானந்தம் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்,தேர்தல் முடிந்த பிறகு அகில இந்திய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் மையக் குழு கூட்டம் பெறுவதாகவும் நாளை காலை முக்கிய நிர்வாகிகள் மாவட்ட தலைவர்கள் ஆகியோருடன் ஆலோசணை கூட்டம் நடைபெற இருப்பதாகவும் கூறினார்.அடுத்த கட்டத்திற்கு எப்படி மக்களை சந்திக்க வேண்டும் என்பது குறித்து ஆய்வு கூட்டம் நடைபெறுவதாகவும் கோவையில் மையக்குழு கூட்டம் நடத்துவதற்கான பிரத்தியேக காரணம் ஒன்றுமில்லை கடைசியாக சென்னையில் கூட்டத்தை வைத்தோம் அதற்கு அடுத்தபடியாக கோவையில் நடத்தி மீண்டும் தற்பொழுது கோவையில் நடத்துகிறோம் என்றும் கூறினார்.

மேலும் அதிமுக தேர்தலில் ஒத்துழைக்கவில்லை என்ற எந்தவிதமான தகவலும் இல்லை அது தொடர்பாக மைக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படவும் இல்லை எனவும் தேர்தல் சம்பந்தமாக எதுவும் இதுவரை விவாதிக்கவில்லை எனவும் குறிப்பிட்டார். பாஜக அதிமுக இடையேயான உறவு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தேர்தலுக்குப் பிறகு அதிமுக உடனான உறவு அமைதியாக இருக்கிறது எனவும் அதிமுக பொதுச்செயலாளராக மதிப்பிற்குரிய எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.

ஆனால் தேர்தல் முடிந்த பிறகு அவர்களுக்குள் உள்கட்சி பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் அதைப் பற்றி எதுவும் கூற முடியாது என்றும் பதிலளித்தார்.தொடர்ந்து அதிமுக உள் கட்சி பிரச்சனையை தீர்க்க பாஜக உதவுமா என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் தவிர்த்து சென்றார் நைனார் நாகேந்திரன்…….