• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை..,

ByS.Ariyanayagam

May 18, 2026

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட சித்தையன்கோட்டை பேரூராட்சி எம். புதுப்பட்டி பொதுமக்கள் தங்கள் பல வருடமாக திருவிழா மற்றும் குழந்தைகள் விளையாடுவதற்கு என பொதுவாக பயன்படுத்தி வந்தனர்.

அரசு நிலத்தை தங்களது பகுதியில் இல்லாத 4 நபர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு பட்டா போட்டு வழங்கிய மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்தனர்.
மேலும் தங்களுக்கு அரசு வழங்கிய வாக்காளர் அடையாள அட்டை .ரேஷன் கார்டு. ஆதார் அடையாள அட்டையை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்க கலெக்டர் அலுவலகம் வந்தனர். பின்பு முற்றுகையிட்டனர்.

பொதுமக்கள் தங்களது பகுதியில் பட்டா வழங்கியதை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஊரை காலி செய்து விட்டு அனைவரும் மலைப்பகுதிக்கு சென்று விடுவோம் என்றும் கூறினர்.