விருதுநகர் கிழக்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.சாத்தூர்.R.K.ரவிச்சந்திரன் அவர்கள் தீர்மானம்..
விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் சாத்தூர் K.K.நகரில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட கழக அவைத் தலைவர் திரு.K.P.T.ஜெயபெருமாள் அவர்கள் தலைமை தாங்கினார்.
விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.சாத்தூர்.R.K.ரவிச்சந்திரன் அவர்கள் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் திரு.S.G.சுப்பிரமணியன் Ex-MLA அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றியதாவது:
தமிழ்நாடு முழுவதும் கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார் 196 சட்டமன்ற தொகுதிகளில் எழுச்சி பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து கழகத்தை பலப்படுத்தினார்.
மேலும் 17 வது சட்டமன்ற பொது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தமிழக முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு கழக வேட்பாளர்களுக்கும், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் ஆதரவாக பிரச்சாரம் செய்து கழகத்தின் சார்பில் 47 பேரும், கூட்டணி கட்சிகள் சார்பாக 6 பேரும் வெற்றி பெற்றனர் அவர்கள் வெற்றிக்கு பாடுபட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியாருக்கு எங்கள் இதய பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் .
தீர்மானம் 2
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ந்து மக்களுக்காக செயல்படும்.கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களைத் தொடர்ந்து பணியாற்றிட எங்கள் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்று நிறைவேற்றப்பட்டது
இந்நிகழ்வில் தலைமை கழக நிர்வாகிகள்,மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய,நகர, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள்,உள்ளிட்ட பல்வேறு நிலையில் கழக பணியாற்றி வரும் நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.




