சாத்துார் அருகே அன்பின் நகரத்தில் இயற்கை உபாதையை கழிக்க செல்வதாக வீட்டில் கூறிச் சென்ற பெண் கிணற்றில் பிணமாக மிதந்தார். அவருடன் சென்ற 2 வயது பெண் குழந்தை மாயமான நிலையில் கிணற்றில் தீயணைப்பு வீரர்கள் குழந்தையை தேடி வருகின்றனர்.

நடுச் சூரங்குடியை சேர்ந்தவர் சேது இவர் மனைவி மாரிஸ்வரி 25. இவர்களுக்கு (மகாராஜா ) 5.வயதில் ஒரு ஆண் குழந்தையும் 2வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
நேற்று மதியம் 12:30 மணிக்கு மாரிஸ்வரி, சிவப்பிரியா 2. குழந்தையுடன் இயற்கை உபாதையை கழிக்க செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார்.
நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.இதனைத் தொடர்ந்து உறவினர்கள் அவரைத் தேடிச் சென்றனர்.அப்போது அன்பின் நகரம் கிராமம் அருகில் உள்ள கிணற்றில் மாரிஸ்வரி சடலமாக மிதந்தார்.
உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் ஏழாயிரம்பண்ணை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பெண்ணின் உடலை கிணற்றிலிருந்து மீட்டனர். கிணற்றில் சேறும் சகதியும் அதிகமாக இருந்த நிலையில் சிவகாசி தீயணைப்பு வீரர்களும் அங்கு வந்து மாயமான குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று இரவு 7:45 மணி வரை குழந்தை தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் தேடினர். குழந்தை உடல் கிடைக்கவில்லை.இந்த நிலையில் பெண்ணின் மர்ம சாவு குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கிருந்த உறவினர்கள் அப்பகுதியில் உள்ள கோழி பண்ணை மீது தாக்குதல் நடத்தினர்.
போலீசார் அவர்களை சமரசம் செய்தனர். 2 வயது பெண் குழந்தை மாயமான நிலையில் மர்மமான முறையில் கிணற்றில் இறந்து கிடந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி ஏழாயிரம்பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.




