• Sun. May 17th, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

ரெயிவே கேட் மூடப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி..,

ByPuthar Pandian P

May 16, 2026

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அம்பாத்துறைக்கு இடையில் உள்ள அழகம்பட்டி ரயில்வே கேட்டில் தண்டவாளம் புதுப்பிக்கும் பணி சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது முன் அறிவிப்பு இல்லாமல் ரெயில்வே கேட்டை மூடி விட்டதால் பஸ் கார் வேன் லாரி மோட்டார் சைக்கிள் உட்பட அனைத்து வாகனங்கள் கடந்து செல்ல முடியவில்லை வந்து திரும்பி சென்றனர்.

இதனால் திண்டுக்கல்லில் இருந்து நிலக்கோட்டைக்கு அழகம்பட்டி ஜாங்கால்பட்டி வழியாக செல்லும் பஸ் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது , மேலும் பஸ், கார் உட்பட வாகனங்கள் ஓட்டிகள் 10 கிலோமீட்டர் தூரம் சுற்றி மாற்று பாதையில் நிலக்கோட்டைக்கு சென்றனர். இதனால் வாகன ஓட்டுகள் பெரிதும் பாதிப்பு அடைந்தனர்.

நேற்று காலை முதல் மாலை வரை இந்த ரெயில்வே கேட் பகுதியில் பணிகள் நடைபெற்றது போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்

ரெயில்வே துறை நிர்வாகம் சாலை வாகன போக்குவரத்து உள்ள ரெயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் வேலை செய்யும் போது முன் அறிவிப்பு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.