• Fri. Aug 21st, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

கீர்த்தனா மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு நேரலை…

ByKalamegam Viswanathan

May 15, 2026

சிவகாசியில் முதல் பெண் எம்எல்ஏ என சொல்கிறார்கள் சிறந்த எம்எல்ஏவாக பட்டம் வாங்க வேண்டும் என்றுதான் என்னுடைய ஆசை.

கடந்த ஐந்து வருடங்கள் எம் எல் ஏ அலுவலகம் திறக்கப்படவே இல்லை திறந்து செயல்பட செய்வது. தற்போது சிவகாசி கோர்ட் அருகே எம்எல்ஏ அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் 24 மணி நேரம் நேரடியாக வந்து சந்திக்கலாம்.

சிவகாசி வெடி விபத்தில் உயிர் இழக்கப்படும் குடும்பங்களுக்கு நிவாரண நிதி குறைவாக இருப்பது குறித்த கேள்விக்கு,

நாங்கள் இப்போதுதான் வந்துள்ளோம் அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் கடந்த ஆட்சியாளர்களும் கேட்டீர்களா என்றார்.

சிவகாசி வெடி விபத்தி இல்லாமல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு ?

சிவகாசியில் தொழிலாளர்களுக்கான கமிட்டி அமைக்கப்படும் என ஏற்கனவே தேர்தல் நேரத்தில் வாக்குறுதி கொடுத்தேன்.. தற்போது பட்டாசு ஆலை அதிபர்கள் பொதுமக்கள் மற்றும் பட்டாசு தொழிலாளர்கள் ஆகியோர் கலந்து ஆலோசனை கமிட்டி அமைக்கப்படும்.

வெற்றிச் சான்றிதழை மறந்து வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுக்கு,

எங்களிடம் தான் இருந்தது அது தேவையில்லாமல் எழுப்பப்பட்டுள்ளது.