• Wed. Oct 7th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கன்னிமார் குருசாமி கோவிலில் கும்பாபிஷேகம்..,

ByK Kaliraj

May 14, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சி பச்சையாபுரம் தெற்கு தெருவில் கன்னிமார் குருசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் நடைபெற்று வந்தன.

திருப்பணி வேலைகள் முடிவடைந்த நிலையில் விமான கலசம், கன்னிமார் குருசாமி, மற்றும் விநாயகர் உள்பட பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக சிறப்பு யாகசாலை பூஜை மற்றும் பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை தொழிலதிபர் செல்வ பாலாஜி மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.