புதுக்கோட்டையில் 28ஆண்டுகளாக இலவசமாக ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்றுத் தரும் அரசுப் பள்ளி ஆசிரியர். இதுவரை 40ஆயிரம் பேருக்குக் கற்றுத் தந்திருக்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்துள்ள வல்லத்திராகோட்டை இராமசாமி தெய்வாணையம்மாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுநிலை ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் திரு.ஆண்டனி. இவர் கடந்த 28ஆண்டுகளாக கிராமப் புறத்தில் இருந்து வரும் ஏழை மாணவ மாணவியருக்கு இலவசமாக ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி என்று சொல்லப்படும் ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்றுத் தருகிறார். ஆந்த வகையில் இதுவரை 40ஆயிரத்துக்கும் அதிகமானோருக்குப் பயிற்சி அளித்து வந்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறியபோது
புதுக்கோட்டையில் 28ஆண்டுகளாக இலவசமாக ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்றுத் தரும் அரசுப் பள்ளி ஆசிரியர். இதுவரை 40ஆயிரம் பேருக்குக் கற்றுத் தந்திருக்கிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்துள்ள வல்லத்திராகோட்டை இராமசாமி தெய்வாணையம்மாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுநிலை ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் திரு.ஆண்டனி. இவர் கடந்த 28ஆண்டுகளாக கிராமப் புறத்தில் இருந்து வரும் ஏழை மாணவ மாணவியருக்கு இலவசமாக ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி என்று சொல்லப்படும் ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்றுத் தருகிறார். ஆந்த வகையில் இதுவரை 40ஆயிரத்துக்கும் அதிகமானோருக்குப் பயிற்சி அளித்து வந்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறியபோது...
நான் கிராமப்புறத்தில் பிறந்து படித்து வளர்ந்தவன். அதனால் கிராமப்புற மாணவர்கள் ஆங்கிலம் கற்றுக் கொள்வதில் எவ்வளவு சிரமம் இருக்கும் என்பதை நான் நன்கு உணர்ந்தவன். இப்போது நான் முதுகலை ஆங்கில ஆசிரியராக அரசு பள்ளியில் பணிபுரிந்தாலும் எனக்கு தனிப்பட்ட முறையில் ஆங்கிலம் கற்றுக் கொடுப்பதில் உள்ள ஆர்வத்தாலும் தீராத தாகத்தாலும் கிராமப்புற மாணவர்களின் சிரமத்தை போக்கும் வகையில் கடந்த 28 ஆண்டுகளாக அவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளித்து வருகிறேன். ஏப்ரல் மே மாதம் வந்துவிட்டாலே எனக்கு சந்தோசம் பிறந்து விடும். காரணம் நான் கற்ற கல்வியை அடுத்த தலைமுறைக்கு கொண்டு போய் சேர்ப்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி உள்ளது. அதனால் இந்த இரண்டு மாதங்களும் எனது வகுப்புகளுக்கு நாள்தோறும் தவறாமல் வரும் மாணவர்களுக்கு ஊக்க தொகையும் கொடுக்கிறேன். இதற்கு முன்பு அவ்வாறு வரும் மாணவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கினேன்.

இப்போது நிறைய பேர் அதை பெற்றுக்கொள்ள தகுதி உள்ளவர்களாக இருப்பதால் எனது ஊதியத்தில் பலருக்கும் பகிர்ந்து அளிப்பதால் 500 ரூபாய் தருவதாக சொல்லி இருக்கிறேன். இந்த 28 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 40,000 மாணவர்கள் என்னைக் கடந்து சென்று இருக்கிறார்கள். அதாவது என்னிடம் பயிற்சி பெற்று சென்று இருக்கிறார்கள். இப்போது காலை 10 மணி முதல் 11 மணி வரை ஒரு பேட்ச்சும் 11 மணியிலிருந்து 12 மணி வரை ஒரு பேட்ச்சும் மதியம் மூன்றரை மணி முதல் நான்கரை மணி வரை ஒரு பேட்ச்சும் அடுத்து ஒரு மணி நேரத்துக்கு இன்னொரு பேட்ச்சும் என ஒரு நாளைக்கு நான்கு பிரிவுகளாக பயிற்சி அளிக்கிறேன்.
இந்த இரண்டு மாதங்களுக்கு நான் இவ்வாறு பயிற்சி அளித்தாலும் தொடர்ந்து பயிற்சி எடுத்துக் கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளாக சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமைகளிலும் எனது வீட்டில் பயிற்சி அளிக்கிறேன். அதேபோல் வருடம் முழுவதும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றே நினைக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் ஏழை மாணவர்கள் ஏழ்மையான நிலையில் இருந்து வேலைக்கு செல்லும் மாணவர்கள் என நாள்தோறும் மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை நேரம் ஒதுக்கி பயிற்சி அளித்து வருகிறேன். இது அனைத்துமே யாரிடமும் எந்த நன்கொடையும் பணமும் பெற்றுக் கொள்ளாமல் அவர்களை ஆங்கிலத்தில் தயக்கமில்லாமல் எழுதவும் பேசவும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற ஒரே சேவை நோக்கத்தோடு தொடர்ந்து செய்து வருகிறேன் இனியும் செய்வேன். எனது அரசுப் பள்ளி ஆசிரியர் பணி நிறைவு பெற்ற பிறகும் எனது இந்த சேவை தொடரும்.

இந்த பணியை நான் முழுமூச்சாக செய்வது பச்சை பூமி என்ற தன்னார்வலர் அமைப்பு மற்றும் ஆண்டனி ஸ்போக்கன் இங்கிலீஷ் அமைப்பின் மூலம் தொடர்ந்து நடத்தி வருகிறேன். பச்சை பூமி என்ற அமைப்பில் இருக்கும் இளைஞர்களை வைத்து இதுவரை லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நடவு செய்து வளர்த்ததோடு ஆறு குளம் போன்ற பகுதிகளில் ஏராளமான பனை விதைகளையும் நட்டு வளர்த்திருக்கிறோம். இது நாட்டை பசுமையாக்கும் முயற்சியில் இந்த பணியை தொடர்ந்து மேற்கொண்டு செய்து வருகிறோம். பச்சை பூமி அமைப்பின் சார்பில் ஏழை மாணவர்களுக்கு புத்தகங்கள் எழுது பொருட்கள் இலவசமாக தொடர்ந்து வழங்கி வருகிறோம். குறிப்பாக அரசு பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு இந்த உதவிகளை செய்து வருகிறோம். தடுமாறும் நிலையில் உள்ள மாணவர்கள் தடம் மாறும் போது அவர்களுக்கு தேவையான உதவியை செய்து தேவையான கல்வியை கற்றுக் கொடுத்தால் அவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவார்கள் மற்றவர்களையும் முன்னேற்றுவார்கள். முழுக்கவும் இதை சேவையாகவே செய்து வருவதால் இந்த பணியில் எப்போதும் சோர்வோ களைப்போ ஏற்பட்டது கிடையாது என்றார்.
சேவைக்காக குறிப்பாக கல்வி சேவைப் பணியில் 28 ஆண்டுகளாக ஓர் அரசு பள்ளி ஆசிரியர் ஈடுபட்டு வருகிறார் என்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தப்படும் ஓர் உண்மையாகும்.



