• Wed. Oct 7th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

மதுரைக்கு கடத்திவரப்பட்ட 331.5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்..,

ByKalamegam Viswanathan

May 14, 2026

மதுரை மாநகர காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுரை வில்லாபுரம் பகுதியில் அவனியாபுரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவனியாபுரம் நோக்கி வந்த ஆந்திர மாநில பதிவின் கொண்ட ஸ்விப்ட் காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் 26 மூடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள போதை பொருள் கொண்டு வந்தது தெரிய வந்தது.

போலீஸார் சோதனை செய்த செய்த போது காரில்16 மூடைகளில் 234 கிலோ கணேஷ் புகையிலைப் பொருட்களும் 10 மூடைகளில் 97.5 கிலோ கூல் லிப் எனப்படும் போதை பொருள் இருந்தது தெரிய வந்தது.

எனவே மொத்தம் 331.5 கிலோ போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் காரை ஓட்டி வந்த பெங்களூருவை சேர்ந்த பக்தாராம் என்பவரின் மகன் பரத் வைஷ்ணவ் (வயது 35) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் பரத் வைஸ் நவ் வில்லாபுரம் மீனாட்சி நகர் பகுதியில் உள்ள மகாவீர் என்பவருக்கு டெலிவரி செய்ய331.5 எடையுள்ள புகையிலைப் பொருட்களைக் கொண்டு வந்தது தெரிவு வந்தது .