• Fri. Jul 3rd, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

மதுபான கடைகள் மூடப்பட்டதை வரவேற்கும் விதமாக பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..,

ByK Kaliraj

May 13, 2026

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அமுதலிங்கேஸ்வரர் கோவில் அருகே பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மதுபான கடை செயல்பட்டு வந்தது இதை மூட வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதேபோல புதிய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் மதுபான கடை திருச்சுழி சாலையில் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே செயல்பட்டு வரும் மதுபான கடையையும் மூட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றவுடன் தமிழகத்தில் பொது மக்களுக்கு இடையூறாக கோவில் பள்ளிகள் மருத்துவமனை அருகே உள்ள 717 மதுபான கடைகள் மூடப்படும் என அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

அதன்படி அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் கோவில் அருகே உள்ள மதுபான கடை, திருச்சுழி சாலையில் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள மதுபான கடை, பந்தல்குடியில் உள்ள மதுபான கடை கோவிலாங்குளம் கிராமத்தில் உள்ள மதுபான கடை ஆகிய நான்கு கடைகள் மூடப்பட்டது. மேலும் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மதுபான கடை 20-ஆம் தேதி மூடப்பட உள்ளது.

அருப்புக்கோட்டையில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுபான கடைகள் மூடப்பட்டதை கொண்டாடும் விதமாக தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் விருதுநகர் மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சதீஷ்குமார் தலைமையில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இணிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இது குறித்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கூறுகையில்,

அருப்புக்கோட்டையில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுபான கடைகளை மூட வேண்டும் என கோரிக்கை விடுத்தோம் அதன்படி தமிழக முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் அதேபோல தமிழகத்தில் கஞ்சா போன்ற போதை பழக்கத்தையும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அதற்கும் முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார் என கூறினர்.