சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் முன்பு தற்காலிக சபாநாயகர் எம்.வீ.கருப்பையா பேசியதாவது.- மாண்புமிகு முதல்அமைச்சர் அவர்களே மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களே 17வது தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினாகளாக தேர்ந்தெடு;க்கப்பட்டு வரலாற்று சிறப்புமிக்க பேரவையின் முதல் கூட்டத்திற்கு வருகை புரிந்திருக்கும் உங்கள்அனைவருக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு உங்கள் அனைவரையும் வெகு மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றேன்.

அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்த நான்கும் எஞ்சாமை வேந்தர்க்கு இயல்பு என்ற வான்புகழ் வள்ளுவன் வாய்மொழிக்;கு ஏற்றபடி துணிவு, கொடைத்தன்மை, அறிவு முயற்சி, இந்த நான்குமே தலைவனுக்குரிய இயல்பு. இந்த இயல்பினை தனக்குள் கொண்ட தலைவனாய், இளைஞர் களின் எழுச்சி நாயகனாய் இன்று நாடுமுழுவதும் உச்சரிக்கும் மூன்று எழுத்து மந்திரமாய் தமிழ்நாட்டு மக்களுக்கு உழைக்கும் இயந்திரமாய் தன்னை மாற்றிக்கொண்ட தளபதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரை வணங்கி வாழ்த்துகிறேன்.
17வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் தற்காலிக தலைவராக இந்த எளிய தொண்டரான மு.வீ.கருப்பையா ஆகிய என்னை மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக பணியாற்ற வாய்ப்பளித்து பெருமை சேர்த்த முதல் அமைச்சருக்கும், என்னை தேர்ந்தெடுத்த சோழவந்தான் சட்டமன்ற தொகுதி பொது மக்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொளகிறேன்.
வரலாற்று சிறப்புமிக்க இந்த பேரவையின் தற்காலிக தலைவராக என்னை பரிந்துரைத்த முதல் அமைச்சருக்கும், நியமித்த ஆளுனருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன்.

எண்ணற்ற தடைகள்,எதிர்வந்த இடர்கள், அனைத்தையும் தவிடுபொடியக்கி இன்னல்கள் பல நேர்ந்தாலும் இடையூறுகள் பல ஏற்படுத்தினாலும் அனைத்தையும் தனியே எதிர்கொண்டு தகர்த்தெறிந்து, விழுந்த கற்களை வெற்றிப்படிக்கட்டாக்கி தமிழகத்தின் அரிமாவாக அமர்ந்து உள்ள முதல்அமைச்சர் மாற்றத்தை கொண்டு வருவதற்கு அரசியல் இயக்கத்தின் குரல் ஓங்கி ஒலித்ததோடு நின்றுவிடக்கூடாது நலன் சார்ந்த செயல்திட்டங்களை முன்னெடுத்து செயல்படவேண்டும்.
அத்தகைய முன்னெடுப்புக்கு அஸ்திவாரமாய் இருக்கும் கொள்கைகள், தீர்க்கத்தனமாக இருத்தல் வேண்டும் எனும் கொள்கையை கொண்டு சமூக நீதி, சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்துடன் கூடியகொள்கை வழி அரசியல் தத்துவம் என்பதை தலைமைத்துவமாக கொண்டு சமரசம் மற்றும் மக்கள் மனநிலையின் மாநில நலன்களை அடிப்படையாக கொண்ட நிலைத்தன்மைகொண்ட கொள்கைகளை அடிப்படையாக வகுத்து பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், சட்டமாமேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கர், சுதந்திரபோராட்டவீரமங்கை ராணி வேலுநாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலையம்மாள் எனகொள்கை தலைவர்கள் வழி நின்று செயலாற்ற முனைந்துள்ள முதல் அமைச்சருக்கு எனது வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.
பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் பிரதிநிதிகளாக பெருமைமிக்க இப்பேரவையில் அமர்ந்து தமிழ் மக்களுக்கு தொண்டாற்றும் பொறுப்பினை ஏற்று நாம் வந்துள்ளோம். உறுப்பினர்கள் இதனை கருத்தில் கொண்டு பேரவையில் பணியாற்ற வேண்டியது நமது கடமை என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். பேரவை உறுப்பினர்களகாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாம் இப்பேரவையின் அலுவல்களை ஏற்று நடத்துவதற்கு முன் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி அதற்குரிய உறுதி மொழியை எடுத்துக்கொள்ளவேண்டும்.
முதலில் முதல் அமைச்சர் மற்றும் அமைச்சர்களையும், சட்டமன்ற கட்சிதலைவர்களையும், முன்னாள் முதல்அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள்மற்றும் முன்னாள் அரசுதலைமை கொறடா ஆகியோருக்கு பிறகு அகர வரிசைப்படி உறுப்பினர்களை உறுதிமொழி எடுத்துக்கொள்ள சட்டமன்ற பேரவையின் முதன்மை செயலாளர் அழைப்பார். இவ்வாறு அவர் பேசினார்.



