• Fri. Jul 3rd, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

தமிழக முதல்வராக விஜய்., தமிழகம் முழுவதும் உற்சாக கொண்டாட்டம்..,

ByK Kaliraj

May 11, 2026

சாத்தூர் அருகே ஒ.மேட்டுப்பட்டியில் தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றதை கொண்டாடும் விதமாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றதை தமிழகம் முழுவதும் அக்கட்சி நிர்வாகிகள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஒ.மேட்டுப்பட்டியில் தமிழக வெற்றி கழகத்தின் விருதுநகர் மாவட்ட செயலாளர் சின்னப்பர் பரிந்துரையில் S.ஆதி கேசவபாண்டி ஏற்பாட்டில் கழக நிர்வாகிகள் ராமகுரு, தனசெல்வபாண்டி,பாண்டிசெல்வம் முன்னிலையில் ஓ.மேட்டுப்பட்டியில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றதை கொண்டாடும் விதமாக தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
மேலும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.