• Fri. Jul 3rd, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

விடுதலை சிறுத்தை கட்சியினர் மறியல் போராட்டம்..,

விருதுநகர் மாவட்டம் குரண்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவகுரு,வயது 50 இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய துணை செயலாளர் பொறுப்பில் இருந்துள்ளார். இன்று காலை சிவகுரு சில மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.

தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிவகுருவை கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில துணை செயலாளர் இளவன் கோதை, மண்டல செயலாளர் சக்திவேல், துணை செயலாளர் இரா. காளிமுத்து, செல்வம், ஆற்றல் அரசு மற்றும் பலர் விருதுநகர் அரசு மருத்துவமனை வாயிலில் ஆர்ப்பாட்டம் செய்தனர், கொலை செய்தவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் சமாதானம் செய்து அவர்களை கலைந்து போக செய்தனர்.