• Sun. May 3rd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

கல்வி ஆண்டுக்கான மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு..,

ByS. SRIDHAR

May 3, 2026

புதுக்கோட்டையில் அரசு ராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி அரசு பிரகதாம்பாள் மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று இடங்களில் இத்தேர்வு இன்று நடைபெற உள்ளது.

இந்த இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவு தேர்வு எழுதுவதற்காக மாணவ மாணவிகள் தற்பொழுது தேர்வு மையத்திற்கு முன்கூட்டியே வந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 7தேர்வு மையங்களில் 3166பேர் தேர்வு எழுதுகின்றனர்.

இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற 468 மாணவ மாணவிகள் இன்று தேர்வு எழுத உள்ளனர்.

தேர்வு நடைபெறும் மையங்களில் போலிசார் பாதுகாப்பு, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் தடையில்லாம மின்சாரம் குடிநீர் உள்ளிட்ட வசதிகள் போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்பொழுது நீர் நுழைவு தேர்வுக்கு வருகை தந்துள்ள மாணவ மாணவிகளுக்கு தேர்வு முகமை அதிகாரிகள் உரிய ஆலோசனை வழங்கி நீட் நுழைவுத் தேர்வு விதிகளின்படி மாணவ மாணவிகளை சோதனைக்கு பின் அனுமதித்து வருகின்றனர்.